சென்னை: சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்குள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் - 19 பரவலைத் தடுக்கும் விதமாத மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ள வழிகாட்டுதலின் படி, தலைமைச் செயலக வளாகத்திற்குள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வளாகத்திற்குள் வரும் ஊழியர்கள்,பார்வையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
தலைமைச்செயலக ஊழியர்கள், பார்வையாளர்கள் சிலர் முக கவசம் அணியாமல் வளாகத்திற்குள் வலம் வருகின்றனர்.
பணியிடத்தில் தலைமைச் செயலக ஊழியர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. முக கவசம் அணியாமல், வரும் ஊழியர்கள் பார்வையாளர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
முககவசம் அணியாத ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ரூ.45 லட்சம் மதிப்பில் கழிவுநீர் அகற்றும் ரோபோக்கள் வழங்கிய ஓஎன்ஜிசி