ETV Bharat / city

முழுக் கட்டணம் செலுத்த சொல்லும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை...!

சென்னை: முழுக் கட்டணம் செலுத்த சொல்லும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

directorate-of-school-education-tamilnadu

author img

By

Published : Aug 4, 2020, 9:01 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மார்ச் 15ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் செயல்படவில்லை. அப்படி இருக்கையில் தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுந்தன.

இதனிடையே, தனியார் பள்ளிகள் சார்பாக நீதிமன்றத்தில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் தற்போது மாணவர்களிடமிருந்து 40 விழுக்காடு கட்டணத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "கரோனா வைரஸ் ஊரடங்கில் தனியார் பள்ளிகள் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை செலுத்தக்கோரி பெற்றோர் மற்றும் மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது.

இதுகுறித்து அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், தனியார் பள்ளிகள் அந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான இடைக்கால தீர்ப்பில், தனியார் பள்ளிகள் கட்டணத்தை மூன்று தவணைகளாக வசூல் செய்துகொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஒருசில பள்ளிகள் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்துவதாக கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அதன் அடிப்படையில், ஜூலை 31ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்தக்கோரும் பள்ளிகள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அதன் அறிக்கையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதன்படி, உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டண வசூல் செய்த தனியார் பள்ளிகள் குறித்த அறிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. எனவே நீதிமன்றத் தீர்ப்பினை மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அப்பள்ளிகளின் மீது முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் ஆகியவற்றினை அனுப்ப வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்: உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.