புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில், என்.ஆர். காங்கிரஸ் பத்து இடங்களிலும், பாஜக ஆறு இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானார். அதற்காக சென்னையில் சிகிச்சை பெற்று திரும்பி, தற்போது வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த 21ஆம் தேதி ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டார்.
தற்காலிக சபாநாயகரும், தேர்ந்தெடுக்கப்பட்ட, நியமன உறுப்பினர்களும் வரும் 26ஆம் தேதி பதவி ஏற்றுக் கொள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சட்டப்பேரவை செயலாளர் முனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், , “புதுச்சேரியின் 15ஆவது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் 26ஆம் தேதி, காலை 9 மணி முதல் 10 மணிக்குள், துணை நிலை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்று கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து 10 மணி முதல் 12 மணிக்குள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் அறையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கறுப்பு, வெள்ளையைத் தொடர்ந்து ‘மஞ்சள் பூஞ்சை’ : அதிர்ச்சியில் மருத்துவ உலகம்!