சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் ஜூன் 30ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில்,
'கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 29 ஆயிரத்து 524 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சிங்கப்பூரில் இருந்து வந்த இரண்டு நபர்கள், பங்களாதேஷ் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த தலா ஒரு நபர், தமிழ்நாட்டில் இருந்த 2,065 பேர் உட்பட 2,069 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6 கோடியே 59 லட்சத்து 66 ஆயிரத்து 829 நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 34 லட்சத்து 75 ஆயிரத்து 185 நபர்களுக்கு வைரஸ் தொற்றுப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 11,094 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 1,008 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 26 ஆயிரத்து 65 என உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 99 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 352 நபர்களுக்கும், திருவள்ளூரில் 100 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 96 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 71 நபர்களுக்கும், கன்னியாகுமரியில் 61 நபர்களுக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பரவியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 4,745 நபர்களும் செங்கல்பட்டில் 1,923 நபர்களும் கோயம்புத்தூரில் 693 நபர்களும் கன்னியாகுமரியில் 400 நபர்களும் காஞ்சிபுரத்தில் 379 நபர்களும்,திருவள்ளூர் மாவட்டத்தில் 627 நபர்களும் என அதிக அளவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா 4 ஆம் அலை தொடங்கிவிட்டதா? கரோனா தரவு வல்லுநர் (covid data analyst) விஜய் ஆனந்த் பதில்