சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கொலீஜியம் பரிந்துரைசெய்தது. இதனை ஏற்ற குடியரசுத் தலைவர் சஞ்ஜிபை மேகாலயாவுக்கு மாற்றம்செய்ய ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்திருந்த பிரிவு உபச்சார விழாவில்கூட பங்கேற்க முடியாமல் மேகாலயாவிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் கடந்துவந்த பாதையைக் காணலாம்.
கொல்கத்தா டூ சென்னை
- 1961 நவம்பர் 2ஆம் தேதி பிறந்த சஞ்ஜிப் பானர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த பின் 1990இல் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.
- கொல்கத்தா, டெல்லி, ஜார்க்கண்ட், அலகாபாத், மும்பை உள்ளிட்ட பல உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சிவில், நிறுவன சட்டங்கள், சமரச தீர்வு, அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றில் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார்.
- கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக இருந்த கடந்த ஓராண்டாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை, நான்கு நீதிபதிகள் மட்டும் கொண்ட மேகாலயாவுக்கு மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. அவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி பதவியேற்று கொண்ட சஞ்ஜீப் பானர்ஜி, கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
தீர்ப்புகள்
- தேர்தல் ஆணையத்தின் சட்டப்பேரவை தேர்தல் நடவடிக்கைகளே தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை பரவ காரணமாக அமைந்துள்ளதால், ஏன் தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பியது
- அரசு பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என அளித்த உத்தரவு
- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், புலன் விசாரணை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழங்கிய உத்தரவு
- நீலகிரியில் டி23 புலியை உயிருடன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த உத்தரவு
- ஸ்டெர்லைட் வழக்கில், மக்களை கொன்றுவிட்டு அதற்கு இழப்பீடாக பணம் கொடுத்தால், அரசின் கடமை முடிந்து விட்டதா? என அரசுக்கு கேள்வி எழுப்பி மக்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என அளித்த உத்தரவு
- தமிழ்நாட்டில் வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக விரிவான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியது
மேகாலயாவுக்கு மாற்றம்
இந்தியாவில் உள்ள சார்ட்டட் நீதிமன்றங்களான மும்பை, கொல்கத்தா, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து நீதிபதி ராமசுப்ரமணியன், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் இதுவரை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், நான்கு நீதிபதிகள் மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக மாற்றம்செய்யப்படுவது தண்டனைக்கான மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது, கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்.
ஆனால், உச்ச நீதிமன்ற கொலீஜியம் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதியாகச் செல்லாமல் தனது பதவியையே ராஜினாமா செய்தார்.
இந்நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் செப்டம்பர் 16ஆம் தேதி பரிந்துரைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: EXCLUISVE: கைவினைக் கலைஞர்களை கவுரவ ஆசிரியர்களாக்க வேண்டும் - பத்மஸ்ரீ முனுசாமி