ETV Bharat / city

என்ன முடிவு எடுக்கப்போகிறது மாநில தேர்தல் ஆணையம்? - விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம் செய்திகள்

ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தலின்போது வாக்குச்சீட்டை எடுத்துச் சென்றவரை தேர்தல் அலுவலரும், காவல் துறையும் தடுக்காத விவகாரத்தில் என்ன முடிவெடுக்க போகிறது? என இன்று (மார்ச் 16) விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ன முடிவு எடுக்கப்போகிறது மாநில தேர்தல் ஆணையம்? - விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Mar 16, 2022, 8:08 AM IST

தஞ்சாவூர்: ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தலின்போது, திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூட்டணி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. காவலர்கள் பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அவர்களின் மனுவில், 'மறைமுக தேர்தல் நாளன்று மூன்று திமுக உறுப்பினர்கள் வராததால், கூட்டணி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வேட்புமனுக்களை பறித்து, கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். பொய் வழக்கில் தங்களை சிறையில் அடைத்துவிட்டு மறைமுக தேர்தல் நடத்த இருக்கின்றனர்' என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மறைமுக தேர்தல் நாளன்று எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று(மார்ச் 15) விசாரணைக்கு வந்தபோது, வீடியோ பதிவுகளை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது.

இந்த வீடியோ காட்சிகளை பார்வையிட்ட நீதிபதிகள், வாக்குச் சீட்டை ஒருவர் பறித்துச் செல்கிறார். அவரைத் தடுக்காமல் காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிருப்தி தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்திய மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்றபோதும், இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்திருக்க வேண்டும் என்றனர். மேலும், வாக்குச்சீட்டுகளை பறித்துச் சென்றவரை ஏன் கைது செய்யவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, சம்பந்தபட்ட நபர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள், இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்க உள்ளது? என்பது குறித்து இன்று (மார்ச் 16) விளக்கமளிக்க, மாநில தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், இதுகுறித்த விசாரணை இன்று(மார்ச் 16) நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: 'தட்டச்சுப்பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் இளம் தலைமுறை: பரிதவிப்பில் ஆசிரியர்கள் - என்ன காரணம்?'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.