ETV Bharat / city

பூரியில் இருந்த புழுவினால் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பிரபல உணவகத்தில் சோதனை - பிரபல உணவகத்தில் பூரியில் புழு

சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல மாலில் செயல்படும் சைவ உணவகத்தில் வாங்கிய பூரியில் புழு இருந்ததாக எழுந்தப் புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனை செய்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

பிரபல உணவகத்தில் பூரியில் புழு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

author img

By

Published : Aug 16, 2022, 5:07 PM IST

Updated : Aug 16, 2022, 6:38 PM IST

சென்னை: கேகே நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமாவதி, இவர் நேற்று மாலை சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் மூன்றாவது தளத்தில் செயல்பட்டு வரும் தனியார் சைவ உணவகத்தில் (நம்ம வீட்டு வசந்த பவன்) சோலா பூரி ஒன்று ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அப்போது அதை சாப்பிட முற்பட்டபோது, அதில் புழு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர், உணவு செய்யும் கூடத்தைத் தான் பார்க்க வேண்டும் என உணவக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து உணவுக்கூடத்தின் உள்ளே சென்று பார்த்தபோது சோலா பூரி தயாரிக்க வைத்திருந்த மாவில் ஐந்திற்கும் மேற்பட்ட புழுக்கள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்டபோது, உரிய பதில் கிடைக்காததை அடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களைத்தொடர்பு கொண்டு புகார் அளித்தார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையிலான குழுவினர், மாவில் புழுக்கள் இருப்பதைக்கண்டு, சமையல் கூடத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர்.

இதையடுத்து அங்கு வைத்திருந்த மற்ற உணவுகளின் மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச்சென்றுள்ளனர். இரண்டு நாட்கள் உணவகத்தை திறக்கக்கூடாது என நோட்டீஸ் கொடுத்து விட்டுச்சென்றுள்ளனர்.

மேலும் பிரபல மாலில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உணவின் தரம் குறித்து சோதனை மேற்கொள்வதாக உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பூரியில் இருந்த புழுவினால் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பிரபல உணவகத்தில் சோதனை

இதையும் படிங்க: பிரியாணியில் புழு எதிரொலியாக பிரபல உணவகத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் சோதனை

Last Updated : Aug 16, 2022, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.