ETV Bharat / city

ஆவடி அருகே பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர் கரோனா தொற்றால் உயிரிழப்பு

சென்னை: ஆவடி தாலுகாவுக்குள்பட்ட மோரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஒ) பணியாற்றி வந்த தங்கமணி கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆவடி அருகே பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர் கரோனா தொற்றால் உயிரிழப்பு
ஆவடி அருகே பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர் கரோனா தொற்றால் உயிரிழப்பு
author img

By

Published : Jun 12, 2021, 1:31 AM IST

ஆவடி அடுத்த மிட்டனமல்லி, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் தங்கமணி (51). இவர் ஆவடி தாலுகாவுக்குள்பட்ட மோரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஒ) பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக கரோனா தொற்று இரண்டாவது அலையில் தீவிர தடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கரோனா

இதற்கிடையில், மே 31ஆம் தேதி தங்கமணிக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் கரோனா தொற்று சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார்.

அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை உறவினர்கள் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தங்கமணி இன்று (ஜூன் 11) உயிரிந்தார்.

இது குறித்து தகவலறிந்த ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். பின்னர், அலுவலர்கள் அவரது சடலத்தை மீட்டு மிட்டினமல்லி சுடுகாட்டுக்கு கொண்டு வந்தனர். அங்கு உறவினர்கள் முன்னிலையில் தங்கமணி சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.