ETV Bharat / city

வீட்டிலேயே துப்பாக்கி பயிற்சி : அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்

author img

By

Published : Jan 21, 2021, 12:29 PM IST

சென்னை: அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டியில் வீட்டிலேயே துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பத்தூர் அத்திப்பட்டில் வீட்டிலேயே துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட வாலிபரால் பரபரப்பு

சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர், வளர்ப்பு நாய்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் துப்பாக்கிப் பயிற்சி மேற்கொள்ள இரண்டு உயர் ரக ஏர் கன் உள்பட 3 ஏர் கன் வாங்கி வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இவர் பயிற்சி மேற்கொள்ளும் போது நிஜ துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அம்பத்தூர் உதவி ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடைப்படையில் தமிழ்ச்செல்வன் வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர், 3 ஏர் கன்னை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து தமிழ்செல்வனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏர் கன் பயன்படுத்த உரிமம் தேவையில்லை என்றாலும் தற்போது பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கும், விலங்குகளை வேட்டையாடவும் ஏர் கன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, பயிற்சிக்காக வாங்கினாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் ஏர் கன் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:குடியிருப்பு பகுதியில் துப்பாக்கியால் சுட்ட விவகாரம்; தடயவியல் துறையினர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.