ETV Bharat / city

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை: முதலமைச்சர் அறிவிப்பு - சென்னை

சென்னை அண்ணா சாலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்படும்

author img

By

Published : Sep 1, 2021, 1:38 PM IST

சென்னை: அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், "கடந்த காலத்தில் சென்னை அண்ணா சாலையில் முறையான அனுமதி பெற்று கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட்டது. ஆனால், எக்காரணத்திற்காக சிலை அகற்றப்பட்டது என்று நான் சொல்ல தேவையில்லை.

அண்ணா சாலையில் சிலை

கடந்த இரு நாள்களுக்கு முன்புகூட திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் சென்னை அண்ணா சாலையில், கருணாநிதிக்கு சிலை மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினார்.

அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை

நீதிமன்றத்தில் பொது இடங்களில் சிலை அமைப்பில் உள்ள சட்ட சிக்கல்களை எடுத்து கூறினேன். சென்னை அண்ணா சாலையில், தந்தை பெரியாருக்கு சிலை உள்ளது. பேரறிஞர் அண்ணாவிற்கும் சிலை இருக்கிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கும் சிலை இருக்கிறது. அதேபோல், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதிக்கும் கண்டிப்பாக அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும். இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து உரிய முடிவு விரைவில் எடுக்கப்படும்" என்று அறிவித்தார்.

இதையும் படிங்க: 'ஓபிஎஸ்ஸுக்கு சசிகலா ஆறுதல்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.