சென்னை: மேடவாக்கம் புஷ்பாநகரை சேர்ந்தவர் ஆல்வின்(எ)பிரைட்(28). இவரை நேற்று(செப்.27) இரவு பள்ளிக்கரணை, அம்பேத்கர் சாலை அருகே மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இவரது நண்பர் பெருமாள் உடம்பில் சில வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் ரவுடி ஆல்வினுக்கும் சூரை மணி என்பவருக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, அதன் காரணமாக சூரை மணி ஆல்வினை கொலை செய்திருக்கலாம் என பள்ளிக்கரணை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரிவாளால் வெட்ட வந்த ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த காவல்துறை!