ETV Bharat / city

பெருந்தொற்றுக்கு பின் சென்னையில் ஸ்டார்ட்அப் சூழல் எப்படி இருக்கிறது? - Venture intelligence founder Arun Natarajan

பெருந்தொற்றால் முடங்கியிருந்த ஸ்டார்ட்அப் சூழல் தற்போது மெல்ல மீண்டு வருகிறது. புதிதாக பலரும் தொழில் தொடங்க விரும்புகிறார்கள். வெளிநாடுகளில் அதிக வருவாய் பெறும் வேலையை துறந்துவிட்டுகூட இங்கு வந்து பணியாற்றுகிறார்கள்.

ஸ்டார்ட்அப் சூழல்
ஸ்டார்ட்அப் சூழல்
author img

By

Published : Aug 27, 2021, 2:44 PM IST

பெருந்தொற்றால் முடங்கியிருந்த ஸ்டார்ட்அப் சூழல் தற்போது மெல்ல மீண்டு வருகிறது. புதிதாக பலரும் தொழில் தொடங்க விரும்புகிறார்கள். வெளிநாடுகளில் அதிக வருவாய் பெறும் வேலையை துறந்துவிட்டுகூட, இங்கு வந்து பணியாற்றுகிறார்கள்.

இச்சூழலில், சென்னையின் புதிய தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறதா என தெரிந்துகொள்வதற்காக டை (TiE) எனப்படும் தொழில் முனைவோர் வழிகாட்டு குழுவின் சென்னை பிரிவு செயல் இயக்குநர் அகிலா ராஜேஸ்வரிடம் பேசினோம்.

களத்தில் இறங்கும்முன் ஆய்வு தேவை

அவர் பேசுகையில், "தற்போது தொழில்நுட்பம் சார்ந்தே அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. குறிப்பாக டீப் டெக் எனப்படும் நவீன தொழில்நுட்பங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.

பெருந்தொற்று பரவல் காரணமாக மருத்துவ வசதி தொடர்பான நிறுவனங்கள், தொலைதூர கல்வி ஆகியவற்றை குறிவைத்தும் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. உபசரிப்பு, நுகர்வோர் சேவை சார்ந்த ஸ்டார்ப்அப்களும் அண்மைக் காலத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.

இருப்பினும் இங்கு சில பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நல்ல திட்டத்தை மட்டுமே கையில் வைத்திருக்காமல் அதன் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். இதற்கான ஆதரவு வாடிக்கையாளர்களிடம் உள்ளதா, நீண்ட காலத்துக்கு இதன் பயன்பாடு, குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சேவைக்கு பொதுமக்கள் எவ்வவளவு பணம் செலவிடுவார்கள் என்பது போன்ற விவரங்களை ஆராய வேண்டும்.

புதிதாக தொழில் தொடங்குபவர்களின் ஐடியாவை மதிப்பீடு செய்வது, சந்தையில் இதனை லாபகரமான தொழிலாகச் செய்ய முடியுமா என ஆலோசிப்பது, அதன் எதிர்கால விளைவுகள் பற்றி ஆராய்வது போன்ற பணிகள் செய்யப்படுகிறது. தொழில் துறையில் முன்னணி உள்ளவர்கள் தொழில் முனைவோரின் திட்டங்கள் மதிப்பீடு செய்வதோடு அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்குகின்றனர்" என்றார் அகிலா.

வாடிக்கையாளர்கள் அல்லது பயனாளர்களுக்கு நீண்ட காலத்தில் பலனளிக்கும் வகையில், அவர்களின் அன்றாட பிரச்னையைத் தீர்த்து வைக்கும் வகையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்பதே அதனை வார்த்து எடுப்பவர்களின் அறிவுரையாக உள்ளது.

களத்தில் இறங்கும்முன் ஆய்வு தேவை
களத்தில் இறங்கும்முன் ஆய்வு தேவை

அத்துறையில் உள்ள போட்டியாளர்கள் பற்றியும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் சிந்திக்க வேண்டும் என்கிறார்கள் மென்டார்கள். பொதுவாக சென்னை, பெங்களூரூ, டெல்லி என்சிஆர் போன்ற நாட்டின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் புதிய தொழில் தொடங்கப்படுவது குறைவாகவே உள்ளது என பலரும் விமர்சிப்பதுண்டு.

ஆனால் சென்னையில் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப்கள் அனைத்துமே லாபகரமாக இயங்கக்கூடியவை எனக் கூறுகிறார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கவனித்து வரும் வென்சர் இன்டலிஜன்ஸ் நிறுவனர் அருண் நடராஜன்.

புதிய துறைகளில் கவனம் செலுத்தலாம்

அருண் நடராஜனிடம் பேசுகையில், "சென்னை சாஸ் கேப்பிட்டல் எனப்படும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏராளமான ஸ்டார்ட் அப் நகரங்களை உருவாக்கியுள்ளது. இதற்கு ஜோஹோ, ஃபிரஷ் ஓர்க்ஸ் போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ந்ததைச் சொல்லலாம்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் உள்ள சேவை சார்ந்த நிறுவனங்களின் கூட்டு மதிப்பு ஒரு பில்லியன் டாலர்களாக உள்ளது. கரோனா தொற்றுக்குப் பின்னர் இது மேலும் அதிகரித்து வருகிறது.பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே 2000களிலேயே இங்கு பல மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

இங்கு பி2பி எனப்படும் நிறுவனங்களுக்கு சேவையளிக்கும் நிறுவனங்களே அதிகம் உள்ளன. நுகர்வோர் சேவை சார்ந்த பிளிப்கார்ட், ஜோமாட்டோ, ஓலா போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இங்கு தொடங்கப்படவில்லை என்பது உண்மை. இதில் ஒரே விதிவிலக்கு பாரத் மேட்டரிமோனி டாட்காம் நிறுவனத்தைச் சொல்லலாம்.

சென்னையில் பெருமளவு நுகர்வோர் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இல்லையென்றாலும் இங்குள்ள தொழில் முனைவோர் அனைவரும் லாபகரமாக இயங்குமாறு சிந்திக்கிறார்கள். தற்போது நாட்டில் மிகவும் கவனத்தைப் பெற்றுள்ள ஜோமேட்டோ போன்ற நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நட்டத்தில் இயங்குகின்றன.

இதனால் சென்னையில் இல்லாத துறைகளை நாம் பலவீனமாகப் பார்க்காமல் இங்குள்ள பலத்தில் கவனம் செலுத்தி மேலும் சேவை சார்ந்த நிதி-தொழில்நுட்ப சேவை போன்றவற்றில் முன்னேறலாம்" எனக் கருத்து தெரிவித்தார்.

தற்போது விண்வெளித் துறையில் இயங்கும் அக்னிகுல் காஸ்மோஸ் மற்றும் குழாய்களில் எண்ணெய் கசிவைக் கணிக்கும் டிடெக் டெக் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தற்போது கவனிக்கத்தக்க வகையில் செயல்படுவதாக அருண் நடராஜன் கூறினார்.

புதிய துறைகளில் கவனம் செலுத்தலாம்
புதிய துறைகளில் கவனம் செலுத்தலாம்

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும், இதற்காக ஒரு நிதி தொகுப்பை ஏற்படுத்த வேண்டும். புதிய தொழில்களுக்கு மாநில அரசு விரைவாகவும், எளிய முறையிலும் அனுமதி வழங்க வேண்டும் என்பது தொழில்முனைவோரின் கோரிக்கையாக உள்ளது.

மேலும், அரசின் ஆர்டர்களின் சிறிய அளவிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. வேலைவாய்ப்புகளை ஏற்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிமுகம் செய்த நிர்மலா சீதாராமன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.