ETV Bharat / city

இரட்டை இலைச் சின்னம் கிடைப்பதற்கு ஓபிஎஸ் தரப்பு ஈபிஎஸ்ஸிற்கு கடிதம்!

உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை கிடைப்பதற்கு ஓபிஎஸ் தரப்பு ஈபிஎஸ்ஸிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இரட்டை இலை கிடைப்பதற்கு ஓபிஎஸ் தரப்பு ஈபிஎஸிற்கு கடிதம்

author img

By

Published : Jun 29, 2022, 10:50 PM IST

சென்னை: பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை சந்தித்தார்.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மனோஜ் பாண்டியன், "தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு ஓபிஎஸ் கையெழுத்திட்டுள்ளார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கையெழுத்திட கடிதம் அனுப்பி உள்ளோம்.

தேர்தல் ஆணையத்திடம் பேசியுள்ளேன். வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் நாளை மாலை 3 மணிக்குள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கையெழுத்திட்ட படிவம் 1 மற்றும் படிவம் 2 கிடைக்கப்பெற்றால் இரட்டை இலை சின்னம் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். அதிமுக வேட்பாளர்கள் யாரும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதை நாங்கள் விரும்பவில்லை.

இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கையெழுத்து போடுவார் என நம்பிக்கை உள்ளது. இரட்டை இலை கொடுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அங்கீகரிக்கப்பட்டவர்கள். இரண்டு பேரும் ஒரே வாக்கில் தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

எனவே, அடுத்த ஐந்து ஆண்டுக்கு இருவரும்தான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆவார்கள். தொண்டர்களின் மீது அக்கறை கொண்டவர்கள் படிவத்தில் கையொப்பம் இடுவார்கள்" என கூறினார்.

இதையும் படிங்க: என்னுடைய ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான்: ஜூனியர் எம்.ஜி.ஆர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.