சென்னை: குன்றத்தூர் அடுத்த சோமங்கலம், புது நல்லூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(54). இவர் இருசக்கர வாகனத்தில் வைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். இன்று (நவ.18) இவர், குன்றத்தூர் மோகலிங்கம் நகர் பகுதியில், தனது இருசக்கர வாகனத்திற்க்காக, ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி, அதை தனது இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் வைத்து விட்டு, வாகனத்தில் அமர்ந்து கொண்டே சிகரெட்டை பற்ற வைத்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பொறிகள் பெட்ரோல் கேன் மீது விழுந்ததில், பெட்ரோல் கேன் வெடித்து மூர்த்தி மீது பட்டு அவரது உடல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, அவர் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மருந்துக்கடையை அடித்து நொறுக்கிய கும்பல் - வைரலாகும் வீடியோ!