சென்னை: ஐஐடி வளாகம் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால், இங்கு அதிகளவில் மான்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. மான்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை ஐஐடி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அங்கு சுற்றித் திரியும் நாய்களால் மான்களை கடித்து அடிக்கடி உயிரிழக்கின்றன.
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த பிப். 7ஆம் தேதி மான்கள் அதிகளவில் இறந்துள்ளதாக தகவல் பரவியது. அப்போது ஐஐடி நிர்வாகம் சார்பில், ஐஐடி வளாகத்திற்குள் ஏதேனும் மான் உயிரிழந்தாலோ அல்லது காயமடைந்தாலோ அதை வனத் துறையினர் உடனே வளாகத்தை விட்டு வெளியே கொண்டு சென்று, உடற்கூராய்வு செய்து அறிவிப்பார்கள்.
இந்நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள குறுக்குச்சாலையில் இன்று (பிப். 20) மான் ஒன்றை தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளது. இதனை வனத்துறையினர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்!