ETV Bharat / city

பத்து ஆண்டுகளாக தண்டனைக்கு ஆளாகாத காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா...

சென்னையில் காவல் ஆணையர் முன்னிலையில் பத்து ஆண்டுகளாக எவ்வித தண்டனைக்கும் ஆளாகாத சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 17, 2022, 8:09 AM IST

Updated : Sep 17, 2022, 2:14 PM IST

சென்னை: தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் காவல் பதக்கங்கள், அந்தந்த நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு சென்னை காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த சட்ட ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 210 காவலர்கள், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 148 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதப்படையில் பணிபுரியும் 73 காவலர்கள், நுண்ணறிவுப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு காவல் பிரிவு, குற்ற ஆவண காப்பகம், பணியிடை பயிற்சி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 99 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதர பிரிவுகளான இரயில்வே, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் செயலாக்கம் ஆகிய காவல் பிரிவுகளில் பணிபுரியும் 18 காவலர்கள் என மொத்தம் 548 ஆண் மற்றும் பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பத்து ஆண்டுகளாக தண்டனைக்கு ஆளாகாத காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா

இந்த பதக்கங்களை (செப்.16) எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். முன்னதாக காவல் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய சங்கர் ஜிவால், வழக்கமாக தண்டனை பெறாமல் பணிபுரியும் சென்னை காவலர்களுக்கு ஒதுக்கப்படும் பதக்கங்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால், இந்தாண்டு பதக்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம்.

அதன் படி, இம்முறை 100 பதக்கங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பதக்கத்தால் சென்னை காவல் துறைக்கு கவுரவமும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணி, பந்தோபஸ்து உள்ளிட்ட பணிகளில் இருக்கும் ஆயுதப்படை காவலர்களுக்கு முறையாக விடுப்பு வழங்குவதில்லை என குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில், அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் காவலர்களுக்கு விடுப்பு வழங்க CLAP என்னும் செயலி உருவாக்கப்பட்டது.

கடந்த 8 மாதத்தில் செயலி மூலம் விண்ணப்பித்த காவலர்களுக்கு 9 ஆயிரம் விடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், காவலர்களின் மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவைகளை கண்காணிக்கவும், மருந்து, சிகிச்சை விவரங்கள் பதிவு செய்ய புதிய செயலி 2 மாதத்தில் தொடங்கி செயல்படுத்தபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது... உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Last Updated : Sep 17, 2022, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.