சென்னை அடுத்த தாம்பரம் மெப்ஸ் பகுதியில் PharmaZell (India) Private Ltd என்ற மருந்து தயாரிப்பு மூலப் பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் தேதி 28 டன் ஃபார்மா கெமிக்கல் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வதற்காக தாம்பரம் மெப்ஸில் இருந்து 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு அனுப்பிவிக்கப்பட்டது. அதன்பின் 20ஆம் தேதி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது தனியார் நிறுவன ஊழியர்கள் லாரியில் இருந்த 576 டிரம் கெமிக்கல்களை இறக்கி மீண்டும் சோதனையிட்டு பின்னர் மீண்டும் லாரியில் ஏற்றினர். அப்போது 94 லட்சம் மதிப்புள்ள 9 டன் ஃபார்மா கெமிக்கல் காணமல் போனது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில், அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் சதீஷ் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:"2,000 ஆண்டுகளாக போராடி பெற்ற வெற்றி மீண்டும் தீண்டாமை எனும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது"