தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் ஆகிய மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதுவரையிலும் 97 ஆயிரத்து 575 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 82 ஆயிரத்து 764 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 12 ஆயிரத்து 735 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2 ஆயிரத்து 76 பேர் இந்தத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 85 விழுக்காடு பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:
ராயபுரம் - 10,041 பேர்
திரு.வி.க. நகர் - 6,623 பேர்
வளசரவாக்கம் - 4,308 பேர்
தண்டையார்பேட்டை - 8,600 பேர்
தேனாம்பேட்டை - 9,294 பேர்
அம்பத்தூர் - 4,283 பேர்
கோடம்பாக்கம் - 9,475 பேர்
திருவொற்றியூர் - 3,108 பேர்
அடையாறு - 5,604 பேர்
அண்ணா நகர் - 9,540 பேர்
மாதவரம் - 2,617 பேர்
மணலி - 1,564 பேர்
சோழிங்கநல்லூர் - 1,855 பேர்
பெருங்குடி - 2,262 பேர்
ஆலந்தூர் - 2,469 பேர்