ETV Bharat / city

வாகன சோதனையில் சிக்கிய 7.60 லட்சம் பறிமுதல்

சென்னை: உழைப்பாளர் சிலை அருகே காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்று (ஏப். 21) கொண்டுவந்த 7.60 லட்சம் பணம் பறிமுதல்செய்யப்பட்டது.

வாகன சோதனையில் சிக்கிய 7.60 லட்சம் பறிமுதல்
வாகன சோதனையில் சிக்கிய 7.60 லட்சம் பறிமுதல்
author img

By

Published : Apr 21, 2021, 1:44 PM IST

சென்னையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று காரணமாக நேற்று (ஏப். 20) இரவுமுதல் 10 மணிமுதல் காலை 4 மணிவரை ஊரடங்கானது கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

7.60 லட்ச ரூபாய் பறிமுதல்

இதனையடுத்து, சென்னை முழுவதும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி காவல் துறையினர் சோதனை மேற்கொண்டபோது, காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற 7.60 லட்ச ரூபாய் பணத்தைப் பறிமுதல்செய்தனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டம், வண்டிக்காரன்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த பாபுலால் (33) என்றும், இவர் செல்போன் கடை நடத்திவருவதும் தெரியவந்தது.

மேலும், சவுக்கார்பேட்டையில் உள்ள தனது அண்ணணுக்கு கொடுப்பதற்காகப் பணத்தைக் கொண்டுசென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற 7.60 லட்ச ரூபாயை காவல் துறையினர் பறிமுதல்செய்ததுடன், ஊரடங்கை மீறி காரில் வந்த பாபுலால் மீது கரோனா தொற்றுப் பரப்புதல், தடையை மீறி செல்லுதல் உள்ளிட்ட பிரிவின்கீழ் அண்ணா சதுக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: 'தமிழ்நாடு எல்லையில் வாகனங்களை திருப்பி அனுப்பும் பணி!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.