சென்னை: கரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (டிச.15) வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் இன்று புதிதாக 640 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 544 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 48 லட்சத்து 66 ஆயிரத்து 723 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 27 லட்சத்து 37 ஆயிரத்து 335 நபர்கள் கரோனா தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 692 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 93 ஆயிரத்து 143 என உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 2 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 9 நோயாளிகளும் என மொத்தம் 11 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 644 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு நிலவரம்:
- சென்னை - 5,59,832
- கோயம்புத்தூர் - 2,51,920செங்கல்பட்டு - 1,74,608
- திருவள்ளூர் - 1,20,566
- ஈரோடு - 1,07,108
- சேலம் - 1,01,997
- திருப்பூர் - 97,967
- திருச்சிராப்பள்ளி - 78,712
- மதுரை - 75, 609
- காஞ்சிபுரம் - 75,885
- தஞ்சாவூர் - 76,293
- கடலூர் - 64,489
- கன்னியாகுமரி - 62,951
- தூத்துக்குடி - 56,538
- திருவண்ணாமலை - 55,283
- நாமக்கல் - 54,143
- வேலூர் - 50,347
- திருநெல்வேலி - 49,715
- விருதுநகர் - 46,414
- விழுப்புரம் - 46,061
- தேனி - 43,614
- ராணிப்பேட்டை - 43,645
- கிருஷ்ணகிரி - 44,005
- திருவாரூர் - 41,972
- திண்டுக்கல் - 33,290
- நீலகிரி - 34,310
- கள்ளக்குறிச்சி - 31,586
- புதுக்கோட்டை - 30,368
- திருப்பத்தூர் - 29,434
- தென்காசி - 27,405
- தர்மபுரி - 28,918
- கரூர் - 24,825
- மயிலாடுதுறை - 23,409
- ராமநாதபுரம் - 20,650
- நாகப்பட்டினம் - 21,404
- சிவகங்கை - 20,460
- அரியலூர் - 16,936
- பெரம்பலூர் - 12,119
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,034
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
- மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 27,37,335
இதையும் படிங்க: நைஜீரியாவிலிருந்து வந்தவர்களுக்கு ஒமைக்ரான்?