சென்னை: தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 6ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 822 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 6120 நபர்கள் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 14 லட்சத்து 2 ஆயிரத்து 914 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 34 லட்சத்து 10 ஆயிரத்து 882 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 21ஆயிரத்து 828 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 23 ஆயிரத்து 144 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 51 ஆயிரத்து 295 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 16 நோயாளிகளும் ,அரசு மருத்துவமனையில் 10 நோயாளிகளும் என 26 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வந்த பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக 972 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 911 நபர்களுக்கும் திருப்பூரில் 473 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 530 நபர்களுக்கும் ஈரோட்டில் 397 நபர்களுக்கும் என பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
புதிதாக கரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்ததால் மாநிலத்தின் நோய்ப் பரவல் வீதம் 5.9 என பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 187 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 609 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: IND vs WI: ஆயிரமாவது போட்டியை அசத்தலாக வென்றது இந்தியா; ஆட்டநாயகனான சஹால்!