ETV Bharat / city

பொறியியல் படிப்பு: சிறப்பு பிரிவினர் கலந்தாய்வில் 6300 காலியிடங்கள்!

சென்னை: இளங்கலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் 6300 இடங்கள் காலியாக உள்ளன.

பொறியியல் படிப்பு
பொறியியல் படிப்பு
author img

By

Published : Oct 5, 2020, 10:18 PM IST

பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை 28ஆம் தேதி உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேர மொத்தம் காலியாக உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்களுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் பிரிவில் 721 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான ஒதுக்கீடு பிரிவிற்கு 363 மாணவர்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 148 பேரும் விரும்பும் கல்லூரிகள் மற்றும் இடங்களை பதிவு செய்துள்ளனர்.

சிறப்புப் பிரிவினருக்கான தற்காலிக ஒதுக்கீடு www.tneaonline.org என்ற இணையதளத்தில் உத்தேச ஒதுக்கீடு 5ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு ஒதுக்கீட்டில் 150 இடங்களில் 134 மாணவர்கள் விரும்பிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அரசு ஒதுக்கீட்டில் உள்ள 6 ஆயிரத்து 500 இடங்களில் 107 மாணவர்கள் தற்காலிகமாக இடங்களை தேர்வு செய்துள்ளனர். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான 500 இடங்களில் 357 இடங்களை தற்காலிகமாக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

அக்டோபர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் காலியாக உள்ள இடங்கள் பொது கலந்தாய்விற்கு கொண்டுசெல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.