ETV Bharat / city

அரசு மருத்துவர்கள் 5ஆவது நாளாக உண்ணாவிரதம்!

சென்னை: ஊதிய உயர்வு, மேற்படிப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவரும் அரசு மருத்துவர்களுக்கு எதிர்கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

govt doctors protest
author img

By

Published : Aug 27, 2019, 7:02 AM IST

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், அரசு மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஊதிய உயர்வு, மேற்படிப்பில் இடஒதுக்கீடு மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களின் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று ஐந்தாவது நாளாக போராடிவருகின்றனர்.

இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சீமான் பேசுகையில், "மருத்துவர்கள் மிக நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய-மாநில அரசு மருத்துவர்களுக்கு பணிநேரம் எல்லாம் ஒன்றுதான் ஆனால் மத்திய அரசு மருத்துவர்கள் 14 ஆண்டுகளில் பெறக்கூடிய சலுகைகளை இங்கு நம்முடைய மருத்துவர்கள் பெறுவதற்கு 21 ஆண்டுகள் ஆகிறது.

மருத்துவர்கள் 2017ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவில்லை. இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கடந்த நான்கு நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு மருத்துவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர் " என தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பாலகிருஷ்ணன் பேசும்போது, போராட்டத்தில் மருத்துவர்கள் நான்கு நாள்களாக உண்ணாவிரம் இருக்கின்றனர். இதுநாள் வரை மருத்துவர்களை அரசு அழைத்து பேசாத காரணத்தால் இன்று அடையாள போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதில் எதாவது அசாம்பாவாதிங்கள் நடந்தல் அதற்கு அரசும், மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் தான் காரணம். மருத்துவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்" என்று எச்சரித்தார்.

முத்தரசன் கூறியதாவது, "மருத்துவத் துறையை சார்ந்த மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இவர்களை வந்து சந்தித்திருக்க வேண்டும். அல்லது சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களை அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அந்த துறையின் செயலாளரும் இவர்களை நேரில் சந்திக்கவில்லை. இந்நிலை நீடித்தால் வரக்கூடிய காலங்களில் சிறப்பு மருத்துவர்கள் என்கிற இடத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

அரசு மருத்துவர்கள் போராட்டம்

Intro:nullBody:ஊதிய உயர்வு, மேற்படிப்பில் இடஒதுக்கீடு மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டடு வருகின்றனர். நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று போராட்டத்தில் ஈடுபடௌடு வரும் மருத்துவர்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மிக நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் பட்டினி போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். மத்திய அசு மருத்துவர்கள் 14 ஆண்டுகளில் பெறக்கூடிய சலுகைகளை இங்கு நம்முடைய மருத்துவர்கள் பெறுவதற்கு 21 ஆண்டுகள் ஆகிறது. பணிநேரம் எல்லாம் ஒன்றுதான். இந்த கோரிக்கை இரண்டு ஆண்டுகளாக முன்மொழிநேது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடத்திய போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவில்லை. நாளைக்கு நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் செய்யவுள்ளனர். தொடர்ந்து நான்கு நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு நாகப்பன், அனிதா என்ற இரண்டு பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். வெயில், மழை, கொசுக்கடி என எது வந்தாலும் போராடி வருகின்றனர்.

இது சம்பந்தப்பட்ட அமைச்சர் போராட்டத்தை முன்னெடுப்பவர்களை அழைத்து பேசி இதற்கு முற்று வைக்க முடியும். ஆனால் அதைப்பற்றி அரசு கவலையே படவில்லை. நாளைக்கு போராட்டம் அறிவித்துள்ளனர். மருத்துவர்கள் நோயாளிகளை பற்றி கவலைபடவில்லை என்று அரசு சொல்லவரும். இது எவ்வளவு தவறானது. அரசுதான் மக்களை பற்றி கவலை கொள்ளவில்லை. அப்படியிருந்திருந்தால் போராட்டம் அறிவித்த சில மணி நேரங்களில் அவர்களை அழைத்து பேசி முற்று வைத்திருக்க முடியும். படித்த மருத்துவர்கள் முன்னெடுக்கும் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மத்திய அரசு அப்பாவி மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு எந்தளவுக்கு மதிப்பளிக்கும் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

நயிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை மருத்துவர்கள் வைக்கவில்லை. அப்படி வைக்க மருத்துவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல. மருத்துவர்கள் போராட்டம் தவறு என்றால் அரசியல் கட்சி தலைவர்கள் ஏன் மருத்துவர்கள் பக்கம் நிற்க போகிறார்கள். நாளை நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பு அரசு தலையிட்டு இதற்கு முற்று வைக்க வேண்டும்.

வேதாரண்யத்தில் இருவருக்கு இடையே நடந்த பிரச்னை கும்பல் கும்பலாக போய் கேட்டபோது வெவ்வேறு சமூகப் பிரச்னையாக மாறி அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. நாங்கள் தமிழ் சமுகம் ஒன்றாக இருக்க வேண்டி சேர்த்துகொண்டு வந்தால் இப்படி உடைத்து விடுகிறார்கள். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அப்போது தான் மீண்டும் இதுபோல் நடக்காமல் தடுக்க முடியும்.

சாதி வாக்குகளை நம்பும் அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காது. மதுரையில் சத்துணவு பணியாளர் வேறு சாதி என்பதால் எங்கள் பிள்ளைகள் அந்த உணவை உண்ண மாட்டார்கள் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். அரசு அவர்களை தீண்டாமை சட்டத்தில் 6 மாதம் உள்ளே போட்டிருக்க வேண்டும். மாறாக அந்த பணியாளரை இடமாற்றம் செய்கிறது. சாதி, மதம் என்னும் தீயை ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காயும் அரசு இந்த பிரச்னைகளில் நடவடிக்கை எடுக்காது.

அன்னிய முதலாளிகளை வைத்து மாநாடு போட்டே ஒன்றும் வரவில்லை. வெளிநாடு போய் என்ன செய்ய முடியும். நாடு சுற்றி பார்த்துவிட்டு வரலாம்" என்று நகைத்தார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.