ETV Bharat / city

50 கேட்கும் காங்கிரஸ்; இறங்கி வராத திமுக! - தொகுதிப்பங்கீடு

சென்னை: திமுகவுடன் இன்று நடந்த தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக இருந்ததாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

congress
congress
author img

By

Published : Feb 25, 2021, 3:35 PM IST

திமுக கூட்டணியில் சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் அடங்கிய குழு, இன்று அண்ணா அறிவாலயம் வந்தது. அங்கு திமுக குழுவுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, 50 தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தை, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி ஆகியோரிடத்தில் அளித்தனர். ஆனால், 20 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது என திமுக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திமுக காங்கிரஸ் இடையே இன்னும் பலகட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது.

பேச்சுவார்த்தைக்குப்பின், செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "நல்ல முறையில், மகிழ்ச்சிகரமாக பேசினோம். இருதரப்பும் அவரவர் கருத்துகளை தெரிவித்தோம். விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கும்" எனக் கூறினார். மகிழ்ச்சி என அழகிரி வார்த்தைகளில் கூறினாலும், திமுக இம்முறை காட்டும் கறார், அவரது முகத்தில் தெரிந்தது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி மற்றும் மாநிலத் தேர்தல்களில் தோல்வி ஆகியவையே காங்கிரசிற்கு அதிக தொகுதிகள் தர திமுக தயங்குவதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

50 கேட்கும் காங்கிரஸ்; இறங்கி வராத திமுக!

இதையடுத்து, உடனடியாக சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்ற காங்கிரஸ் குழுவினர், திமுகவுடனான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை நடத்தினர்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த முறை ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு, காங்கிரஸ் கட்சியின் தோல்வியும் ஒரு காரணம் என்பதால், இம்முறை தொகுதிகளை பிரிப்பதில் திமுக அதிக கவனம் செலுத்துகிறது. அதே போல் திமுகவிற்கு அரசியல் ஆலோசனை வழங்கும் ஐபேக் நிறுவனமும், திமுகவை அதிக தொகுதிகளில் போட்டியிட அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்தக்கோரிய வழக்கை நிராகரிக்க வேண்டும் - ஓபிஎஸ், ஈபிஎஸ் மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.