ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 NEWS @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

5 PM
5 PM
author img

By

Published : Oct 1, 2021, 5:03 PM IST

1.'எம்ஜிஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது!'

'எம்ஜிஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது. திமுக கட்சியே ஒரு துரோகக் கும்பல்' என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

2.ஏர் இந்தியாவை வாங்கிய டாடா நிறுவனம்?

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பது தொடர்பான ஏலத்தில், டாடா நிறுவனம் வெற்றிபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3.'உயர் பணிகளில் இருந்தாலும் மண்ணையும் தாய்மாெழியையும் மறக்காதீர்!'

குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் இந்திய அளவில் உயர் பணிகளில் இருக்கிறபோதும் நீங்கள் பிறந்த மண்ணை, வளர்ந்த மண்ணை, தவழ்ந்தபோது பேசிய தாய்மொழியை மறந்துவிடாதீர்கள் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

4.கோடநாடு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

5.தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம்!

தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பரங்கிமலை லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் 70 ஆயிரம் ரூபாயும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

6.செப்டம்பரில் 23 விழுக்காடு உயர்வுகண்ட ஜிஎஸ்டி வசூல்

செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக என ஒன்றிய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

7.சிவாஜி கணேசன் பிறந்த நாள் - முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

நடிகர் சிவாஜி கணேசனின் 94ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

8.'தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தத் திட்டம்'

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்திற்குள் ஒரு கோடியே 23 லட்சத்து ஒன்பதாயிரத்து 370 தடுப்பூசிகள் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

9.நீண்ட நாள் கோரிக்கையை ஸ்டாலின் தீர்த்துவைப்பார் - பாப்பாபட்டி மக்கள் நம்பிக்கை

முதலமைச்சரை ஆர்வத்தோடு வரவேற்க பாப்பாபட்டி கிராம மக்கள் காத்திருக்கின்றனர். தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

10.ஸ்வச் பாரத் உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஸ்டாலின் வரவேற்பு!

தூய்மை இந்தியா திட்டம், அம்ருத் திட்டங்களை தமிழ்நாடு அரசு வரவேற்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.