சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்களும், விமான நிலைய சரக்கு நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் பார்சல்களில் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சென்னையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல இருந்த பார்சல்களில் போதைப்பொருள்கள் இருப்பது கண்டுபிடிடக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், பார்சல் விலாசம் குறித்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட தகவலில், சூடோபெட்ரின் வகையைச் சேர்ந்த 49.2 கிலோ போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் சர்வதேச மதிப்பு 9.86 கோடி ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மாந்திரீகம் செய்வதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி!