சென்னை: தமிழ்நாடு முழுவதும் இதுவரை ரூ. 47.6 கோடி தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் சுமார் 47.6 கோடி ரூபாய் மதிப்பில் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரொக்கமாக 31.4 கோடி ரூபாய், 40 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், 13.8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 1.01 கோடி மதிப்பிலான வெள்ளி என சுமார் 47.6 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உரிய ஆவணம் இருந்தும் ரூ. 22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்