சென்னை: 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 28-ம் தேதி முதல் முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை, சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் உலகில் உள்ள 180 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 24 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த ரூ.92.13 கோடிக்கான நிர்வாக அனுமதியும் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சென்னை - தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க:சாதிப்பாகுபாடு - குடிக்கும் தண்ணீரில் விஷம் கலப்பு!