ETV Bharat / city

கரோனா பாதிப்பாளர்கள் 4 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில்... தமிழ்நாடு அரசு ரிப்போர்ட்! - கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனையில் 4 சதவீதம் பேர் சிகிச்சை

கரோனா தொற்று மூன்றாம் அலையில் மருத்துவமனைகளில் 4 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், 96 சதவீதம் பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனை

author img

By

Published : Feb 3, 2022, 2:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 22 ஆம் தேதி உச்சத்தை அடைந்தது.

தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தநிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், ”அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களல் 2067 இடங்களில் 185144 படுக்கை வசதிகள் உள்ளன.

அவற்றில் கரோனா சிசிக்கை அளிப்பதற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 380 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 7 ஆயிரத்து 981 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் ஆக்ஸிஜன் தேவைப்படும் என கருதப்படும் நோயாளிகளுக்காக 79 ஆயிரத்து 413 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனையில் 4 சதவீதம் பேர் சிகிச்சை
கரோனா பாதிப்பாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

அவற்றில் 3 ஆயிரத்து 629 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 45 ஆயிரத்து 769 படுக்கைகளில் 3 ஆயிரத்து 349 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 ஆயிரத்து 198 ஐசியூ படுக்கைகளில் 1,003 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பிப்.3 ஆம் தேதி காலை 7 மணி அளவில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 999 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 4 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 96 சதவீதம் பேர் வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழனத்தை கொன்றுவிட்டு தமிழன் (ராகுல்) என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்'

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.