ETV Bharat / city

ரூ.1,100 கோடி மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீண்டும் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை - தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் இயக்குநர்கள் கைது

தவணை முறையில் பணம் செலுத்தினால் நிலம் வழங்குவதாகக் கூறி ரூ.1,100 கோடி மோசடி செய்த வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேரை அமலாக்கத்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை நடவடிக்கை
அமலாக்கத்துறை நடவடிக்கை
author img

By

Published : Mar 7, 2022, 10:29 PM IST

சென்னை: Disc Assets Lead India Ltd என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் பொதுமக்களிடம் தவணையில் பணம் செலுத்தினால் நிலம் வழங்குவதாகக்கூறி 1,100 கோடி ரூபாய் மோசடி செய்தது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் 4 இயக்குநர்களான ஆனா உமா சங்கர், சரவண குமார், அருண் குமார் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கடந்த 2016ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

4 பேர் கைது

அதே போல, இதே விவகாரத்தில் அமலாக்கத்துறையும் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து Disc Asset நிறுவன இயக்குநர்கள் 4 பேரையும் இன்று (மார்ச் 7) கைது செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் பிணை பெற்று 4 பேரும் வெளியே வந்த நிலையில், அவர்களது பிணை மனுக்களைத் தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் Disc Asset நிறுவன இயக்குநர்கள் 4 பேரின் பிணையையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமலாக்கத்துறை நடவடிக்கை

அதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்ட நிலையில், அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்.25 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், மீண்டும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநர்கள் 4 பேர் மீதும் கைது நடவடிக்கையை அமலாக்கத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: காதலுக்காக கர்நாடகா சென்ற அமைச்சர் சேகர் பாபுவின் மகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.