சென்னை: கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேலும் 300 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![அரசு ஸ்டான்லி மருத்துவமனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14108535_269_14108535_1641434366082.png)
ஏற்கனவே உள்ள கரோனா வார்டில் 350 படுக்கைகளில் 120 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். இந்நிலையில், தற்போது கரோனா மற்றும் ஒமைக்ரான் போன்றவை வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய மேலும் 300 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கரோனா முதல் அலை பரவலின் போது ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த அனைத்து துறை வார்டுகளும் கரோனா வார்டாக மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4,862 பேருக்குக் கரோனா பாதிப்பு