கரோனா நோய்க் கிருமித் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைப் பெற்றுவந்த 30 பேர் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்களை மருத்துக் கல்லூரி முதல்வரும், மருத்துவக்கல்வி இயக்குநருமான நாராயண பாபு கைதட்டி வழியனுப்பிவைத்தார். மேலும் அவர்கள் 15 நாள்கள் வீட்டில் தனிமையிலிருந்த பின்னர் ரத்தத்தினை தானமாக தர விரும்பினால் தரலாம் என வேண்டுகோள்விடுக்கப்பட்டது.
கரோனா நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள் கூறும்பொழுது, அங்கு தங்களை நன்றாக கவனித்துக் கொண்டதாகவும் சரியான உணவுகள் அளித்ததாகவும் தெரிவித்தனர். இதுபோன்ற பெருந்தொற்று வேறு யாருக்கும் வரக்கூடாது என விரும்புவதாகவும் தெரிவித்தனர்.