ETV Bharat / city

பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு: பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணி நீக்கம் - Chennai School Student Death

சென்னை ஆழ்வார் திருநகரில் தனியார் பள்ளி பேருந்து மோதி மாணவன் உயிரிழந்ததில், பள்ளி முதல்வர் உள்ளிட்ட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு
பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு
author img

By

Published : Apr 19, 2022, 1:08 PM IST

சென்னை: ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கடந்த மாதம் பள்ளி பேருந்து மோதியதில், அதே பள்ளியில் படித்த இரண்டாம் வகுப்பு மாணவன் தீக்க்ஷித் உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள், அதிரடி விசாரணை மேற்கொண்டு, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே விபத்து நடந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளியின் முதல்வர் தனலட்சுமி, போக்குவரத்து குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் இரண்டு பேர் என மூன்று பேரை பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் படிங்க: விரட்டப்படும் சடலங்கள்? என்ன சொல்கிறது கிறிஸ்தவம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.