சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று(ஏப். 13) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், ’தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 19 ஆயிரத்து 705 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 29 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 46 லட்சத்து 95 ஆயிரத்து 908 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 34 லட்சத்து 53 ஆயிரத்து 163 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 228 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 27 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 910 என உயர்ந்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் யாரும் புதிதாக நோய் தொற்றுப் பாதிப்பால் இறக்கவில்லை என்பதால் 38 ஆயிரத்து 25 பேர் இறந்துள்ளனர்.
சென்னையில் 10 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 6 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 5 நபர்களுக்கும், சேலத்தில் 3 நபர்களுக்கும், திருச்சியில் 2 நபர்களுக்கும், புதுக்கோட்டை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபருக்கும் என 29 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோயம்புத்தூரில் நேற்றை விட இன்று(ஏப். 13) பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இந்தியாவில் மேலும் 1,088 புதிய கரோனா பாதிப்புகள்; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்'