ETV Bharat / city

கரோனா நோயாளிகள் 277 மாயம் - காவல் துறை வலைவீச்சு - corona

சென்னையில் கரோனா நோயாளிகள் 277 பேர் தவறான தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரிகளை கரோனா பரிசோதனை மையங்களில் கொடுத்துவிட்டு தற்போது மாயமானதாக மாநகராட்சி கொடுத்த பட்டியலின் அடிப்படையில் தேடி வருவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

corona
corona
author img

By

Published : Jun 14, 2020, 10:53 PM IST

சென்னையில் சுமார் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 38 பேர் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,850 பேர் மருத்துவமனைகளிலும், 3 ஆயிரத்து 389 பேர் பாதுகாப்பு மையங்களிலும் உள்ளனர். கரோனாவால் பாதிக்கப்படுபவர்களை சுகாதாரத் துறை தனித்தனியாக பட்டியலிட்டு அவர்களை முறைப்படுத்துகின்றனர்.

அரசு மருத்துவமனை, தனியார் ஆய்வகங்கள், நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் தினந்தோறும் பரிசோதனை செய்யப்படுபவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மண்டல வாரியாக பிரித்து பட்டியிலிடுகின்றனர். அவ்வாறான பட்டியலில் கடந்த 19 நாள்களில் 277 பேர் தலைமறைவாகி இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிர்ச்சித் தகவல்களை சென்னை காவல் துறைக்கு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காவல் துறை தரப்பில், "கடந்த 23ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதிவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பட்டியலில் 277 பேர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் பரிசோதனைக்குப் பின்னர் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மேற்கொள்ளவில்லை. அவர்கள் அளித்த முகவரியிலும் அவர்கள் வசிக்கவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த தொடர்பு எண், முகவரி தவறாக இருப்பதால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

இதுகுறித்த பட்டியலை சென்னை காவல் துறையிடம் மாநகராட்சி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் கரோனா பாதிப்பபடைந்து சிகிச்சைக்கு வராமல் காணாமல் போனவர்கள் மீது பகுதிவாரியாக அந்தந்த காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டியலின் அடிப்படையில் அந்தந்த காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்” என கூறப்பட்டிருக்கிறது.

கரோனா வைரஸ் தொற்றுடன் 277 நபர்களும் காணாமல் போய்விட்டதால் அவர்கள் வெளியில் சென்றிருந்தால் அவர்கள் மூலம் கரோனா பாதிப்பு தீவிரமாக பரவியிருக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை செய்தவர்கள் குறித்த விவரங்களை சேகரித்ததில் ஏற்பட்ட பிழையின் காரணமாகவும் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்

குறிப்பாக சில தினங்களுக்கு முன்னதாக சென்னை மாநகராட்சி சார்பாக, கரோனா பரிசோதனை செய்பவர்களின் விவரங்களை தினமும் சேகரத்து அதை பட்டியலிட்டு அனுப்ப வேண்டும் என புதிய விதிகள் விதிக்கப்பட்டது. அதன்படி தற்போதுதான் பரிசோதனை செய்பவர்களின் ஆதார் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகிறது. இதற்கு முன்பு சில தனியார் பரிசோதனை மையங்களில் அவ்வாறு விவரங்களை முறையாக சேகரிக்கவில்லை என கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.