சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.8) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 85 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதிகளவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் இரண்டு ஆயிரம் மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் இடம்பெறுவர்" எனத் தெரிவித்தார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் J.K. திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஆளுநருடன் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசித்தாரா? முதலமைச்சர்!