வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தை ஒரு மாதம் முற்றுகையிடும் போராட்டத்தை பாமக அறிவித்துள்ளது.
முதல் நாளான இன்று (டிச. 01) நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதுமிருந்து பாமகவினர் சென்னைக்கு வந்தனர். அவர்களை வரும் வழியிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைதுசெய்து-வருகின்றனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து போராட்டம் ஆரம்பமாகும் வரை பெரியார் சிலை அருகே தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் கைதுசெய்து வருகின்றனர்.
போராட்டத்தில் பங்கேற்க பாமகவினர் தங்களது சொந்த வாகனங்கள், ஆட்டோக்கள் போன்றவற்றில் சாதாரண பயணிகள்போல் வருகின்றனர். அவர்கள் அனைவரையும் கைதுசெய்து காவல் துறையினர் திருமண மண்டபங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த பாமகவின் மூத்தத் தலைவர் தீரன் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.