காஞ்சிபுரம்: சென்னை குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(20), ரிச்சர்ட்ஸ்(16) இருவரும் 12ஆம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் நேற்று (செப்.18) மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றனர். அப்போது ஏரியின் மதகு அருகே நின்று செல்பி எடுத்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் விழுந்து முழ்கினர்.
அதன்பின் போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் இருவரது உடலையும் மீட்டனர். அதன்பின் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: காதல் திருமணமான நான்கு நாட்களில் இளைஞர் மரணம்