ETV Bharat / city

போர் போடும் போது மின்சாரம் தாக்கி இருதொழிலாளர்கள் உயிரிழப்பு - கீழ்ப்பாக்கம் காவல்துறை

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் போர்வெல் பணியில் ஈடுபட்டிருந்த இருதொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்,

2 died, 1 injured in a current shock
author img

By

Published : Aug 9, 2019, 2:46 AM IST

சென்னை ராணி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவகி. இவரது வீட்டின் பின்புறம் ஆறு தொழிலாளர்கள் போர்போடும் பணியில் ஈடுபட்டனர்.

200அடி ஆழத்தில் போர்போட்டுக் கொண்டிருந்த போது, போர்வெல் வாகனம் சரியும் நிலையில் இருந்தது. இதை கவனித்த தொழிலாளர் சிவா என்பவர், கடப்பாறையை கொண்டு முட்டுக் கொடுத்துள்ளார்.

அப்போது பூமி அடிக்குச் சென்ற கேபிள் மீது கடப்பாறை குத்தியதில், தவறுதலாக மின்சாரம் வாகனம் அருகில் நின்றிருந்த சிவா, பாண்டி ஆகியோர் மீது பாய்ந்தது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் மற்றொரு தொழிலாளரான முனியாண்டி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

போர் போடும் பணியில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்!

Intro:கீழ்ப்பாக்கத்தில் தண்ணீருக்காக போர் போடும் போது மின்சாரம் தாக்கி இருவர் பலி, ஒருவர் படுகாயம்Body:*கீழ்ப்பாக்கத்தில் தண்ணீருக்காக போர் போடும் போது மின்சாரம் தாக்கி இருவர் பலி, ஒருவர் படுகாயம்.*

சென்னை டிபி சத்திரம், ராணி அண்ணா நகர் பகுதியில் தேவகி என்பவருக்கு சொந்தமான வீட்டில் தண்ணீருக்காக இன்று போர் போடும் வேலை நடைபெற்றது. இதற்காக ரித்தீஷ் போர் வாலில் இருந்து உரிமையாளர் பழனிராஜ் மற்றும் வேலை ஆட்கள் 6 பேர் சேர்ந்து வேலை செய்ததாக தெரிகிறது.

அப்போது 80 அடி போர் போட வேண்டிய இடத்தில் கூடுதலாக 200 அடி போர் போடும் வேலை நடந்ததாக தெரிகிறது.

மேலும் அந்த சாலை தார் சாலை என்பதால் போர் போடும் இயந்திரம் சரியும் நிலையை இருந்தபொழுது அந்த இயந்திரம் சரியாமல் இருக்க கடப்பாரை கொண்டு சிவா என்பவர் முட்டு கொடுத்துள்ளார். அப்போது கடப்பாரை வழியாக தவறுதலாக மின்சாரம் பாய்ந்து போர் போடும் இயந்திரம் அருகில் இருந்த சிவா மற்றும் பாண்டி ஆகியோர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே கொளத்தூரை சேர்ந்த சிவா மற்றும் பாண்டி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் முனியாண்டி என்பவரை ரித்தீஷ் போர்வெல் உரிமையாளர் பழனிராஜ் பலகை கொண்டு அவரை அடித்து கீழே தள்ளி காப்பாற்றியுள்ளார். காயமடைந்த முனியாண்டி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.