ETV Bharat / city

ரூ.2.10 கோடி ஊழல் செய்த போக்குவரத்து ஆணையர் திருநெல்வேலிக்கு இடமாற்றம் - திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்னை மாவட்ட போக்குவரத்து துறை ஆணையரான நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் அவரை திருநெல்வேலி துணை போக்குவரத்து ஆணையராக தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியிட மாற்றம் செய்யதுள்ளது.

நடராஜன்
நடராஜன்
author img

By

Published : Mar 20, 2022, 1:32 PM IST

சென்னை: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்னை மாவட்ட போக்குவரத்து துறை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் சில நாள்கள் முன் திடீர் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

குறிப்பாக அவர், மேலும் இது மட்டுமின்றி, துணை ஆணையரான நடராஜன் வாகனங்களைப் பதிவு செய்யவும், கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க தலா ரூ.5 லட்சம் வீதம் 35 உதவியாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது மட்டுமில்லாமல் நடராஜனிடம் உதவியாளராக முருகன் என்பவரிடம் இருந்தும் கணக்கில் வராத பணமான ரூ.1.79 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில் லஞ்சம் பெறுவதற்கு உடந்தையாக இருந்ததாக, உதவியாளர் முருகனை இரண்டாவது குற்றவாளியாக லஞ்ச ஒழிப்புத்துறை பல கோணங்களில் விசாராணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம்

இதற்கிடையே மார்ச் 19ஆம் தேதியான நேற்று, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் பணியிடமாற்றம் பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் படி, அவர் திருநெல்வேலி போக்குவரத்து துறை துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் துணை ஆணையர் நடராஜனை திருநெல்வேலி துணை போக்குவரத்து ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரூ.35 லட்சம் பெற்ற விவகாரம்: போக்குவரத்து ஆணையர் மீது வழக்குப்பதிவு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.