கடந்த மே 5ஆம்தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதிவரை சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று கண்டறியும் வகையில், 45 ஆயிரத்து 730 முகாம்கள் நடத்தப்பட்டன.
அனைத்து முகாம்களிலும் மொத்தம் 24 லட்சத்து 11 ஆயிரத்து 329 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் தோராயமாக ஒரு முகாமில் 53 பேர்வரை பரிசோதனைக்காக பங்கேற்றனர்.
14 லட்சத்து 469 பேருக்கு லேசான அறிகுறிகள் இருந்தது மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது. சதவிகித அடிப்படையில் நேற்று 6 விழுக்காட்டினருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 13 லட்சத்து 5 ஆயிரத்து 651 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் நேற்று மட்டும் 1320 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகளுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.