சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று (நவம்பர் 28) 12ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதிமுதல் தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
12ஆவது மெகா தடுப்பூசி முகாம்
இதணையடுத்து, தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்தும் வகையில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு முழுவதும் 12ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது.
50 ஆயிரம் தடுப்பூசி மையங்கள்
இன்று மொத்தம் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவரும் நிலையிலும்கூட தடுப்பூசி போடும் பணி தொய்வின்றி நடைபெறும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய தடுப்பூசி முகாமில் இரண்டாம் தவணை தடுப்பூசிக்காகக் காத்திருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுவரை தமிழ்நாட்டில் 77.02 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 41.60 விழுக்காட்டினருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி தொடக்கம்