திமுகவின் தேர்தல் அறிக்கையின்படி இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது மிகவும் முக்கிய திட்டம்.
இந்த நிதி உதவித்தொகை, பணக்காரர்களுக்கும், மாத ஊதியம் பெறுபவர்களுக்கும் வழங்கக் கூடாது என்று விமர்சனங்களும், வழக்குகளும் எழுந்துள்ளன. அதனால் இந்தத் திட்டத்துக்குத் தகுதி வாய்ந்த குடும்பங்களைக் கண்டறி அளவுகோல் மற்றும் வழிமுறைகளை அரசு வகுத்துவருகிறது எனத் தெரிவித்தார்.
இதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், குடிசை மற்றும் வீடுகளில், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்க பல்வேறு அளவுகோல்கள் இருக்கலாம் என தெரிகிறது.
இதையும் படிங்க: நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்க அனுமதி - தமிழ்நாடு அரசு