ETV Bharat / city

பதிவுத் துறையில் ஜனவரி 2022 வரை வருவாய் ரூ.10785.44 கோடி! - பதிவு செய்த அன்றே ஆவணங்களை விடுவித்தல்

2020-21ஆம் ஆண்டு நிதியாண்டின் தொடர்ச்சியாக ஜனவரி 2021 வரை வருவாய் ரூ.7927.3 கோடி வசூலிக்கப்பட்டதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை
வணிகவரி மற்றும் பதிவுத்துறை
author img

By

Published : Feb 3, 2022, 10:59 PM IST

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தலைமையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் மற்றும் பதிவுத்துறைத் தலைவரால் அனைத்து மண்டலங்களிலும் பதிவுத்துறையின் பணி சீராய்வு கூட்டங்களும் காணொலி காட்சி மூலம் வாராந்திர கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கூட்டங்களில் அரசின் வருவாயை எவ்வித விடுதலும் இன்றி வசூலிக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறத்தப்பட்டது.

அலுவலர்களுக்கு அறிவுரை

சரியான ஆவணங்களைத் தாமதமின்றி பதிவு செய்தல், பதிவு செய்த அன்றே ஆவணங்களை விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல் ஆகியன பின்பற்றப்பட வேண்டும் எனவும் கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இவ்வருவாய் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகமாகும். உதாரணமாக 2018-19 நிதியாண்டில் ஜனவரி 2019 வரை வருவாய் ரூ.8937.45 கோடியும், 2019-20ஆம் ஆண்டு நிதியாண்டில் ஜனவரி 2020ஆம் ஆண்டு வரை வருவாய் ரூ.9145.06 கோடியும், 2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில் ஜனவரி 2021 வரை வருவாய் ரூ.7927.3 கோடி ஆகும்.

பணிகளில் கவனம்

அக்கூட்டங்களில் அரசின் வருவாயை எவ்வித விடுதலும் இன்றி வசூலிக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், சரியான ஆவணங்களைத் தாமதமின்றி பதிவு செய்தல், பதிவு செய்த அன்றே ஆவணங்களை விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல் ஆகியன பின்பற்றப்பட வேண்டும் எனவும் கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதன் காரணமாகப் பேரிடர் ஏதும் இல்லாத காலத்தில் பெறப்பட்ட வருவாயினை விடக் கடந்த ஜனவரி மாதத்தில் பதிவுத்துறையின் வருவாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலோக சிலைகளை விற்க முயன்ற பாஜக நிர்வாகி - சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.