ETV Bharat / city

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட 10 அறிவிப்புகள் என்னென்ன?

போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புதிய 10 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

10 அறிவிப்புகள்
10 அறிவிப்புகள்
author img

By

Published : Sep 9, 2021, 7:05 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (செப். 8) நடந்த போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் துறையின் அமைச்சர் ராஜகண்ணப்பன் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

  • தமிழ்நாட்டில் புதியதாக BS - IV குறியீட்டிற்கு இணக்கமான இரண்டாயிரத்து 213 டீசல் பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்தல்.
  • அரசுப் போக்குவரத்து கழகங்களில் கூடுதல் வருவாய்க்காக பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான 10 இடங்களில் நிறுவுதல்.
  • அரசுப் போக்குவரத்து நிறுவனங்களின் கட்டடங்களின் கூரையில் சூரிய சக்தி மின்னாற்றல் தகடுகள் நிறுவுதல்.
  • அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல்.
  • பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வராமலேயே பழகுனர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றமாகிய சேவைகளைப் பெறுதல்.
  • திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 302.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பகுதி அலுவலகக் கட்டடம் கட்டுதல்.
  • மதுரை மாவட்டம் மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் சொந்தக் கட்டடம் 528 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஓட்டுநர் தேர்வு தளம் கட்டுதல்.
  • கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 498 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்டுதல்.
  • போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் முதன்மை கணக்கு அலுவலர், கணக்கு அலுவலர் உதவி இயக்குநர் (உள் தணிக்கை) உதவி இயக்குநர், அனைத்து சரக அலுவலகங்களில் பணிபுரியும் உதவி கணக்கு அலுவலர்கள் தணிக்கை பணியினை மேற்கொள்ளும் பொருட்டு மடிக்கணினி, தரவு அட்டைகள் 17.92 லட்சம் ரூபாய் செலவில் வழங்குதல்.
  • அனைத்து சரக அலுவலகங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள், சோதனைச் சாவடிகளுக்கு புதிய கணினிகள் அச்சுப்பொறிகள் 291.90 லட்சம் ரூபாய் செலவில் வழங்குதல், உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு குறைக்கப்பட்டது - பேரவையில் நிதியமைச்சர் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.