ஹைதராபாத்: வங்கிகளில் பணத்தைச் சேமிக்கும் பழக்கம், இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் பணத்துக்குக் குறிப்பிட்ட அளவிலான வட்டியைச் சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். அதேநேரம் வங்கிகளில் பல தரப்பட்ட சேமிப்பு முறைகள் உள்ளன.
அந்த வகையில் SIP (systematic investment plan) என்ற முறையான முதலீட்டுத் திட்டம் மிகச் சிறந்த ஒன்று என வர்த்தகவியலாளர்கள் கருதுகின்றனர். ஒருவருக்கு அவரது ஊதியம் உயரும்போதெல்லாம், அவரை அதிகப்படியான செலவுகளைச் செய்யத் தூண்டும். இதற்கு யாரும் விதி விலக்கல்ல.
ஆனால் இவ்வாறு ஊதியம் உயரும்போதெல்லாம் முதலீட்டை அதிகரித்தால், வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் கடன் இல்லாமல் அனுபவிக்கலாம் என்பதே இத்திட்டத்தின் இலக்காக இருக்கிறது.
SIP கணக்கை எவ்வாறு தொடங்குவது? வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட வங்கிகளில் உரிய ஆவணங்களுடன் இந்த SIP கணக்கைத் திறக்கலாம். இதில் முதலில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தத் தொடங்க வேண்டும். பின்னர் அடுத்தடுத்து நமது ஊதியம் உயரும்போதெல்லாம், முதலீடு செய்யும் பணத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்.
இதனை வங்கிகளில் SIP டாப்-அப் என்று அழைக்கிறார்கள். இதற்கு வங்கிகளில் சில வரைமுறைகளும் உள்ளன. உதாரணமாக ஒருவர் 5,000 ரூபாயை முதலீடாகத் தொடங்குகிறார் என்றால், அடுத்த 6 அல்லது 12 மாதங்களில் 10 அல்லது 20 சதவீதம் முதலீட்டை அதிகரித்து டாப்-அப் செய்யலாம்.
முதலீடு செய்யும் தொகைக்கான வட்டியும் ஒவ்வொரு வங்கி வரைமுறையின்படி வாடிக்கையாளருக்குக் கிடைக்கும். இதன் மூலம் தேவையற்ற செலவுகள் குறைக்கப்பட்டு, எதிர்கால தேவைக்கான பணம் சேமிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கழுத்தை நெறிக்கும் ஆன்லைன் கடனை தவிர்ப்பது எப்படி.?