ஹைதராபாத்: நாட்டில் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டை காட்டிலும் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், மதிப்புமிக்க மஞ்சள் உலோகத்தின் விலை தினந்தோறும் ஏறுமுகத்தில் உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் உலக நாடுகளின் பொருளாதார சிக்கல், பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட காரணிகள் காரணமாக தங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (ஏப்.13) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,987 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 896 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
24 காரட் தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 386 என நிர்ணயிக்கப்பட்டு, 43 ஆயிரத்து 088 ஆக உள்ளது. வெள்ளி விலையை பொருத்தமட்டில் கிராம் 73.80 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெற்றி 73 ஆயிரத்து 800 ஆக உள்ளது.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெயில்; தெலுங்கானாவில் பீர் விற்பனை அதிகரிப்பு!