மும்பை: உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக உலக பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு மே 9ஆம் தேதி நிலவரப்படி 52 பைசா சரிந்து ரூ.77.49 என்ற நிலையில் உள்ளது.
உலகலாவிய பணவீக்கம், முக்கிய நாடுகளில் இறுக்கமான பணவியல் கொள்கை, பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால் பண மதிப்பு குறைந்துவருவதாக மூத்த பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல, அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தை பாதிக்கக்கூடும். இது முதலீட்டர்களிடையே சுணக்கத்தை ஏற்படுத்தாலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இரண்டு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை!