நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 137 நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டுவந்தது. இந்த நிலையில், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக மார்ச் 22ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில், 12ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.81 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 93.87ஆகவும் உள்ளது. நேற்று பெட்ரோல் விலை ரூ.101.61ஆகவும், டீசல் விலை ரூ.93.07ஆகவும் இருந்தது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 2) பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 20 பைசாவும், டீசல் விலை 60 பைசாவும் உயர்ந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.108.21ஆகவும், டீசல் விலை ரூ.98.21ஆகவும் உள்ளது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.45ஆகவும், டீசல் ரூ.97.52ஆகவும் இருந்தது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 2) பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 பெசாவும், டீசல் லிட்டருக்கு 76 பைசாவும் உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 500 இடங்களில் சிபிஎம் போராட்டம் - கே. பாலகிருஷ்ணன்