Gold Rate சென்னை: கடந்த சில் நாள்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம் விலை இன்று குறைந்து காணப்படுகிறது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4,840-க்கு விற்பனையாகிறது. ஆக சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,720-க்கு விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,239-க்கும்ச சவரனுக்கு ரூ.41,912-க்கும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,872-க்கு விற்பனையானது.
வெள்ளி விலை: வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.66 ஆகவும், சவரனுக்கு ரூ.500 குறைந்து ரூ.66,000 ஆகவும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.66,500-க்கு விற்பனையானது.
இதையும் படிங்க: 'பெட்ரோல், டீசல் - இன்றைய விலை'